Loading...
 

அடிப்படை நிகழ்ச்சி நிரல்

 

 

இந்த அடிப்படை நிகழ்ச்சி நிரலானது புதிதாக சாசனம் செய்யப்பட்ட கிளப்புகளுக்காகவும், Agora-வுடன் எந்த முன் அனுபவமும் இல்லாத உறுப்பினர்கள் இடம்பெறும் கிளப்புகளுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எப்படி இயங்குகிறது என்பதை எல்லா உறுப்பினர்களும் புரிந்துக் கொண்டவுடன், கல்வியின் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார், பிறகு அவர்கள் இருக்கும் தொகுப்பில் புதிய செயல்பாடுகளைச் சேர்க்கத் தொடங்கலாம்.

முதல் சந்திப்பிற்கு கூட இது பொருத்தமானது, இதைச் செயல்படுத்த மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் போதுமானது, அதே நேரத்தில் மிகவும் கல்வி ரீதியாகவும் பொழுதுப் போக்காகவும் இருக்கும். சாத்தியமான அனைத்து சந்திப்பு செயல்பாடுகளிலும், பின்வரும் அடிப்படை தொகுப்பு இடம்பெறும்:

 

First Meeting

 

நிகழ்ச்சி நிரல்

இந்த அடிப்படை நிகழ்ச்சி நிரலுக்கு குறைந்தது 8 பேர் தேவை, இதில் பின்வரும் பாத்திரங்கள் இடம்பெறும்:

  1. சந்திப்பின் தலைவர்.
  2. முதல் சொற்பொழிவு திட்டத்தை மேற்கொள்ளும் ஒரு பேச்சாளர். "நீங்கள் விரும்பும் விஷயங்களைப் பற்றி பேசுவது"  (அடிப்படை கல்வி வரிசை அமைப்பின் செயல்திட்டம் #2).
  3. "இன்றைய நாளின் சிந்தனை" செயல்பாட்டைச் செய்ய விரும்பும் நபர்.
  4. நேரம் கண்காணிப்பாளர்.
  5. மொழி இலக்கணவாதி. இவர் உபரிச் சொல் கணக்காளராகவும் செயல்பட வேண்டும்..
  6. பேச்சாளரை மதிப்பீடு செய்ய சொற்பொழிவு மதிப்பீட்டாளர். இவர் சொற்பொழிவு செயல்திட்டத்திற்கு பயனுள்ள மதிப்பீடுகளை எப்படி வழங்குவது என்பது குறித்து மேலும் அறிய இந்தக் கட்டுரையையும் படிக்க வேண்டும், இதில் மதிப்பீட்டு அட்டை மற்றும் வரையறைகள் உள்ளன..
  7. உடனடித் தலைப்பு சொற்பொழிவுகளின் ஒருங்கிணைப்பாளர்.
  8. சந்திப்பு மதிப்பீட்டாளர்.

பங்கேற்பாளர்கள் வெவ்வேறு பாத்திரங்களுக்கு தானாக முன்வந்து பங்காற்ற வேண்டும், அல்லது உடன்பாடு இல்லை என்றால் அவர்கள் எதேச்சையாக தேர்வு செய்யப்பட்டு அப்பாத்திரத்தை வகிக்க நியமிக்கப்படலாம்.

பாத்திரங்கள் நியமிக்கப்பட்டவுடன், இணைக்கப்பட்ட மெட்டீரியல்களை வாசித்து என்ன பங்காற்ற வேண்டும் என்பதை அனைவரும் தாங்களே அறிந்துக்கொள்ள வேண்டும்.

8 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இருந்தால், "இன்றைய நாளின் சிந்தனை" என்னும் பாத்திரங்களை அல்லது சொற்பொழிவுகள் மற்றும் மதிப்பீடுகளைச் சேர்க்கலாம்.

மெட்டீரியல்கள் - நேரடி சந்திப்புகள்

இந்த வடிவில் சந்திப்பை நடத்திட, உங்களுக்கு பின்வரும் மெட்டீரியல்கள் தேவைப்படும்.

Agenda

  • பிரிவுகள் மற்றும் அவை ஒவ்வொன்றையும் யார் செய்யப் போகிறார்கள் என்ற தகவல்கள் இடம்பெறும்  நிகழ்ச்சி நிரல். பரிந்துரைக்கப்படும் வேர்டு டெம்ப்ளேட் இதோ இங்கே, இதனை நீங்கள் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். இந்த நிலையில் அலுவலர் பொறுப்புகளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை.
  • நேரம் கண்காணிப்பாளர் நேரத்தை அளவிடுவதற்கு ஸ்டாப்வாட்ச் அல்லது மொபைல் போன்.
  • சிவப்பு, பச்சை, மஞ்சள் சமிக்ஞைகளின் தொகுப்பு (வண்ணத் தாளின் மூன்று தாள்களாக கூட இருக்கலாம்), இவை  நேர சமிக்ஞைகளாக பயன்படுத்தப்படும்.
  • மொழி இலக்கணவாதி அறிக்கைக்கு ஒரு தாள். நீங்கள் இந்த  வேர்டு டெம்ப்ளேட்டைப்  பயன்படுத்தலாம்.
     
  • பொது மதிப்பீட்டு படிவங்கள். ஒவ்வொரு சொற்பொழிவுக்கும் ஒரு பங்கேற்பாளருக்கு ஒரு படிவம் தேவை. உதாரணமாக, நீங்கள் இரண்டு நபர்கள் பங்குபெறும் சொற்பொழிவு செயல்திட்டங்களை ஏற்பாடு செய்திருந்து, 10 பங்கேற்பாளர்கள் கலந்துக் கொண்டால், உங்களுக்கு 20 படிவங்கள் தேவை. இதோ இங்கே உங்களுக்காக எளிய டெம்ப்ளேட் (பவர்பாயிண்ட்) மற்றும் விரிவான டெம்ப்ளேட் (போட்டோஷாப்). உங்கள் கிளப் தகவல்களுடன் நீங்கள் இரண்டையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். உங்களிடம் பவர்பாயிண்ட் இல்லை என்றால் அல்லது தனிப்பயனாக்கம் செய்ய நேரம் இல்லையென்றால், இந்த பொதுவான PDF படிவத்தை நீங்கள் பிரிண்ட் செய்துக் கொள்ளலாம்.
  • மொழி இலக்கணவாதி அவர் அன்றைய நாள் தேர்ந்தெடுத்த வார்த்தையுடன் ஒரு தாளைத் தயாரிக்க வேண்டும். அந்த வார்த்தையை அனைவரும் பார்க்கும் அளவுக்கு பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும்.
  • எல்லாருக்கும் பேனாக்கள்.

மெட்டீரியல்கள் - ஆன்லைன் சந்திப்புகள்

சந்திப்பு ஆன்லைனில் இருந்தால், பெரும்பாலான விஷயங்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன, மேலும் எங்களது பலனளிக்கும் உடைமைகள் உருவாக்கும் மென்கருவி மூலம் அவற்றை உருவாக்க முடியும்.

ஆன்லைன் சந்திப்புப் மெட்டீரியல்களின் மிக முக்கியமான அம்சம் பின்வருவதை உறுதி செய்வதாகும்:

  • தொடர்புடைய செயல்திட்டத்திற்கான மதிப்பீட்டு அட்டையை எங்கு கண்டுபிடிப்பது என்பது மதிப்பீட்டாளர்களுக்குத் தெரியும். (இவை ஒவ்வொரு செயல்திட்டம், பாத்திரம், அல்லது செயல்பாட்டின் கீழே அமைந்துள்ளன)
  • நேரத்தை எப்படி சமிக்ஞை செய்யப் போகிறோம் என்பதை நேரம் கண்காணிப்பாளர் முடிவு செய்ய வேண்டும். மீண்டும், எங்களது பலனளிக்கும் உடைமைகள் உருவாக்கும் மென்கருவியைப் பயன்படுத்தி வெவ்வேறு பொருத்தமான வண்ணங்களுடன் ஜூம் பின்னணியை உருவாக்கலாம்.
துரதிர்ஷ்டவசமாக, ஜூம் பாம்பிங் அல்லது சந்திப்பை ஹேக் செய்வது பெரிய பிரச்சனையாகிவிட்டது. வழக்கமாக, சந்திப்பை சீர்குலைக்கும் நபர்கள் உடனடியாக அதிலிருந்து நீக்கப்படுவதை சந்திப்பு உதவியாளர் உதவி செய்வார், அது அவருடைய பொறுப்பாகும். உங்களிடம் சந்திப்பு உதவியாளர் பாத்திரம் இல்லை என்றால், நீங்கள் நம்பும் எந்த உறுப்பினரையும் அந்தப் பாத்திரத்தை செய்யச் சொல்லலாம். எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், இடையூறு செய்பவர்களைக் கையாளுவதற்கு தயார் செய்யப்பட்ட வியூகம் உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

 


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 14:58:38 CET by agora.